நூறு ஆண்டுகளுக்கு முன்பே நாம் இப்படியா?

peoplenews lka

நூறு ஆண்டுகளுக்கு முன்பே நாம் இப்படியா?



1918 - 1920 காலப்பகுதியில் உருவான “இன்புளூவன்சா” நோயினால் உலகளாவிய ரீதியில் ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தார்கள். அமெரிக்காவில் மாத்திரம் 675,000 பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இன்புளூவன்சா நோய் சரியாக நூறு ஆண்டுகளுக்கு பிறகு இன்று நாம் எதிர்நோக்கியுள்ள COVID-19 நோய் தொற்றுப்போல் மனிதர்களின் சுவாத் துளிகளின் மூலம் பரவக்கூடியதாக அமைந்திருந்தது.

அன்றைய காலம் இன்று உலகம் முழுமையாக நெருங்கி இருப்பது போல் இருந்திருக்க வாய்ப்பு இல்லையே. பின்னர் எவ்வாறு இவ்வளவு இறப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டு உள்ளது என எமக்கு வியப்பு ஏற்படலாம்.

இன்று நாம் உலகமயமாக்கம் என்னும் காலப்பகுதியில் வாழ்ந்துவருவதால் நாடுகளுக்கிடையில் மிகப் பாரியளவு போக்குவரத்து தொடர்பாடுகள் காணப்படுவதால் இந்த நோய்த்தொற்று தீவிரம் COVID-19 இல் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை எமக்குள் ஏற்படலாம்.

ஆம் உண்மைதான். ஆனால் இன்புளூவன்சா இருந்த 1918 -1920 காலப்பகுதி முதலாவது உலகப் போரின் முடிவு காலமாக அமைந்திருந்தது. இந்த காலப்பகுதியில் இராணுவ சிப்பாய்கள் உலகம் முழுவதும் சுற்றி இந்த இன்புளூவன்சா நோயின் காவிகளாக இருந்துள்ளார்கள்.

இந்த காலகட்டத்தில் இன்று COVID-19 ஆக நடைமுறைப்படுத்தும் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணியும் தேவை போன்றன மிக உறுதியாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

             

ஐந்து கோடி மக்களுக்கு அதிகமானவர்களை கொன்று குவித்த இந்த இன்புளூவன்சா நோய் தொற்று இந்த உலகத்தினை விட்டு தடுப்பூசிகள் வரமுன்னர் முடிவுக்கு வந்தது. ஆம் இயற்கையாகவே மக்கள் கூட்டமாக ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியே (Natural’ Herd Immunity) இதற்கு காரணமாக அமைந்தது.

Share on

தேஜா பதிவுகள்

peoplenews lka

அனுமதியின்றி ட்ரோன் கமராவினை இயக்கிய 2 பேர் கைது......

விக்டோரியா அணை, விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் 4 ஆவது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை.. Read More

peoplenews lka

இந்திய பெருங்கடல் இன்று சீன பெருங்கடலாக மாறுகிறது...

சீனா மிகப் பெரிய தேசம். உலகில் அதிகூடிய சனத்தொகை உடைய நாடு. மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி உடைய நாடு. இன்று மிகத் திடமான பொருளாதாரப் பின்னணியை பெற்றுள்ள நாடு.. Read More

peoplenews lka

1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்....

1860 இல் இலங்கையை உலகில் முன்னிலை நாடாக மாற்றிய மலையக தமிழ் விவசாயிகள்... Read More

peoplenews lka

எதிர்கால மனித குலத்துக்கு 90 சதவீதம் கடலுணவு!...

உலகில் பறந்து விரிந்துகிடக்கும் சமுத்திரங்களை நம்பி பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பெருங்கடலில் இருந்து மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முதல் வாசனைப் பொருட்கள் போன்ற ஆடம்பரப் பண்டங்கள் வரை கிடைக்கப் பெறுகின்றன... Read More